திருச்சி, கரூர், திருப்பூர், கோவை, நீலகிரி, நெல்லை, குமரி மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. புதுச்சேரி, காரைக்காலில் அதிகனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபிரி, ஈரோட்டில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது. சேலம், திருப்பூர், கோவை, நாமக்கல் மாவட்டங்களிலும் இடி, மின்னலுடன் கனமழை பெய்யக்கூடும் என கூறப்பட்டுள்ளது.
நாளை சென்னை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், நெல்லை, குமரி மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கனமழை பெய்யும். தமிழ்நாட்டின் இதர மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பெரும்பாலான இடங்களில் மிதடமான மழை பெய்யும். நவ. 20-ல் கிருஷ்ணகிரி, தருமபரி, திருப்பத்தூர்., ஈரோடு, கள்ளக்குறிச்சி, சேலம், கடலூரில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment