18.09.2021
முதல் 08.11.2021 வரை , இணைய வழியில் நடைபெற்ற விநாடி- வினா போட்டியில்
சிறந்து விளங்கிய , தற்போது பத்தாம் வகுப்பு பயிலும் 89 மாணவர்கள் அனைத்து
மாவட்டங்களிலிருந்தும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர் . மேலும் , தெரிவு
செய்யப்பட்ட மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் , ஐக்கிய அரபு அமீரக ( United
Arab Emirates ) நாட்டிலுள்ள , துபாய் ( Dubai ) நகரத்திற்கு , வருகிற
2021 , டிசம்பர் மாதம் சுற்றுலா அழைத்துச் செல்ல திட்டமிடப்பட்டுள்ளது .
மேலும் , மாணவர்களை பாதுகாப்பாக அழைத்துச் சென்று வர மூன்று ஆண் மற்றும்
மூன்று பெண் ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். எனவே , இணைப்பிலுள்ள ,
தெரிவு செய்யப்பட்ட தங்கள் மாவட்டத்தைச் சார்ந்த , சுற்றுலா செல்ல
விருப்பமுள்ள மாணவர்களின் பெற்றோரிடமிருந்து , துபாய் நகரத்திற்கு சுற்றுலா
அழைத்துச் செல்ல இசைவு தெரிவித்து ஒப்புதல் பெற்ற விவரத்தினை இணைப்பில்
கண்டுள்ள படிவத்தில் பூர்த்தி செய்து நாளை மாலை 3 19.11.25 ^ ( 19.11,202J
மணிக்குள் இவ்வலுவலக " எம் பிரிவு " மின்னஞ்சல் முகவரிக்கு (
msectndse@gmail.com ) அனுப்பி வைக்குமாறு அனைத்து முதன்மைக்கல்வி
அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் . மாவட்ட மேலும் , விருப்பமுள்ள
மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் , அவர்தம் அருகாமையிலுள்ள மண்டல கடவுச்
சீட்டு அலுவலகத்திற்குச் ( Regional Passport Office ) சென்று
விண்ணப்பித்து , கடவுச் சீட்டு பெறுவது சார்ந்த முதன்மைக் கல்வி அலுவலரின்
பொறுப்பாகும் என தெரிவிக்கப்படுகிறது. இது மிகவும் முக்கியம் என்பதால் ,
உரிய தனிக்கவனம் செலுத்தி செயல்படுமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறது .
இணைப்பு :
1. தெரிவு செய்யப்பட்ட மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் விவரம் ( மாவட்ட வாரியாக )
2. பெற்றோரின் ஒப்புதல் மாதிரி படிவம்
No comments:
Post a Comment