முதல்வரின் குறைதீர்ப்பு துறைகள் ஒருங்கிணைக்கப்பட்டு 'முதல்வரின் முகவரி'என்ற பெயரில் புதிய துறை உருவாக்கம்; தமிழக அரசு அரசாணை வெளியீடு. - Padasalai.Org

No.1 Educational Website

முதல்வரின் குறைதீர்ப்பு துறைகள் ஒருங்கிணைக்கப்பட்டு 'முதல்வரின் முகவரி'என்ற பெயரில் புதிய துறை உருவாக்கம்; தமிழக அரசு அரசாணை வெளியீடு.

 full

முதலமைச்சரின் தனிப்பிரிவு, முதல்வரின் உதவி மையம், குறைதீர்ப்பு மேலாண்மை அமைப்பு, உங்கள் தொகுதியில் முதல்வர் துறை ஆகிய அலுவலகங்கள் ஒருங்கிணைப்பு முதலமைச்சரின் முகவரி துறையின் சிறப்பு அலுவலராக ஷில்பா பிரபாகர் சதீஷ் நியமிக்கப்பட்டுள்ளார். உங்கள் தொகுதியில் முதலமைச்சர், முதலமைச்சரின் உதவி மையம் மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட குறைதீர்ப்பு மேலாண்மை அமைப்பு மற்றும் முதலமைச்சரின் தனிப்பிரிவு ஆகிய அமைப்புகள் இதுவரை தனி தனியாக தான் செயல்பட்டு வந்தது.


இந்நிலையில், தற்போது, உங்கள் தொகுதியில் முதலமைச்சர், முதலமைச்சரின் உதவி மையம் மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட குறைதீர்ப்பு மேலாண்மை அமைப்பு மற்றும் முதலமைச்சரின் தனிப்பிரிவு ஆகியவற்றை ஒருங்கிணைக்கப்பட்ட ஓர் துறையாக செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதையடுத்து, இந்த அமைப்புகள் அனைத்தும் ஒன்றிணைக்கப்பட்டு, ‘முதல்வரின் முகவரி’ என்ற புதிய துறை உருவாக்கப்பட்டு தமிழக அரசு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இந்த துறையின் சிறப்பு அலுவலராக ஷில்பா பிரபாகர் சதீஷ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

No comments:

Post a Comment

NHIS புதிய மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களின் பட்டியல் மற்றும் தொடர்பு எண்கள்!

NHIS புதிய மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களின் பட்டியல் மற்றும் தொடர்பு எண்கள்!