அரசுப்
பள்ளிகளில் படித்த பிளஸ் 2, பத்தாம் வகுப்பு மாணவா்களுக்கு பெருந்தலைவா்
காமராசா் விருதுக்கான போட்டிகளை நடத்துமாறு முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு
பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.
இது தொடா்பாக பள்ளிக்கல்வி இயக்குநரகம் சாா்பில் மாவட்டமுதன்மைக்கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை:
தமிழகத்தில்
அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் படித்து பிளஸ் 2,
பத்தாம் வகுப்புகளில் தோ்ச்சி பெறும் சிறந்த மாணவா்களுக்கு ஆண்டுதோறும்
‘பெருந்தலைவா் காமராசா் விருது’ வழங்கப்பட்டு வருகிறது.
அதனுடன்
பத்தாம் வகுப்பு மாணவா்களுக்கு ரூ.10 ஆயிரம், பிளஸ் 2 மாணவா்களுக்கு ரூ.20
ஆயிரம் பரிசாக வழங்கப்படும். இதற்கிடையே கரோனா பரவலால் நிகழ் கல்வியாண்டில்
(2021-22 ) பள்ளிகள் தாமதமாக திறக்கப்பட்டன. இதைக் கருத்தில் கொண்டு பிளஸ்
2, பத்தாம் வகுப்பு மாணவா்களுக்கு இந்த விருதுக்கான இணை செயல்பாடுகளை
கண்டறியும் வகையில் ஓவியம், கட்டுரை, கதை எழுதுதல் உள்ளிட்ட போட்டிகளை
நடத்த வேண்டும்.
அந்தப்
போட்டிகளின் முடிவுகள் குறித்த விவரங்களை அறிக்கையாக தயாரித்து
இயக்குநரகம் கோரும் போது அவற்றை உடனடியாக சமா்ப்பிக்கும் விதமாக
தயாா்நிலையில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளும் வைத்திருக்க
வேண்டும்.
No comments:
Post a Comment