திருக்குறள் :
இயல்: நட்பியல்
அதிகாரம்:கூடா நட்பு
குறள் எண்:834
குறள் :
ஓதி உணர்ந்தும் பிறர்க்குரைத்தும் தானடங்காப்
பேதையிற் பேதையார் இல்
பொருள்:
படித்தும், படித்ததை உணர்ந்தும், உணர்ந்ததைப் பலருக்கு உணர்த்திடவும் கூடியவர்கள், தாங்கள் மட்டும் அவ்வாறு நடக்காமலிருந்தால் அவர்களைவிடப் பேதைகள் யாரும் இருக்க முடியாது
பழமொழி :
A liar is not believed when he speaks the truth
பொய்யன் உண்மை பேசும் போது யாரும் நம்புவதில்லை
இரண்டொழுக்க பண்புகள் :
1. கடினமாக மட்டும் அல்ல கவனமாகவும் உழைப்பேன் அப்போது தான் வெற்றியை அடைய முடியும்.
2. மன நிறைவு வாழ்க்கையின் மந்திரக் கோல் எனவே எப்போதும் எல்லாவற்றிலும் மன நிறைவோடு இருப்பேன்
பொன்மொழி :
கீழ்நோக்கி உங்கள் பாதத்தைப் பார்க்காதீர்கள், மேல்நோக்கி நட்சத்திரங்களைப் பாருங்கள். வாழ்வும் மேம்படும்.
பொது அறிவு :
1." துருப்பிடித்த கோள் " என்றழைக்கப்படும் கோள் எது?
செவ்வாய் கோள்.
2. ஜனவரி முதல் தேதி சுதந்திர தினம் கொண்டாடும் நாடு எது?
சூடான்.
English words & meanings :
ஆரோக்ய வாழ்வு :
நார்த்தங்காய் வயிற்றுப்புண், வாந்தி, குமட்டல் போன்றவற்றை சரிசெய்யும். நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். கேன்சர் நோயை குணப்படுத்தும், வராமல் தடுக்கும். உடல் சூட்டை குறைத்து உடலை குளிர்ச்சி படுத்தும். பித்தம் நீங்க உதவுகிறது. இதனுடைய தோல் வலி நிவாரணியாக பயன்படுகிறது.
கணினி யுகம் :
மார்ச் 15
அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த ஜோன். எப். கென்னடி, அமெரிக்க பாராளுமன்றத்தில் நுகர்வோர் பாதுகாப்பு தொடர்பாகவும், நுகர்வோர் உரிமைகள் சட்டம் தொடர்பாகவும் ஆற்றிய முக்கிய உரை 1962 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 15 ஆம் திகதி இடம்பெற்றது. அவ்வுரையே உலக அளவில் ஒரு நாட்டுத் தலைவர் நுகர்வோர் பாதுகாப்புத் தொடர்பாக ஆற்றிய முக்கிய உரையாகக் கணிக்கப்படுகின்றது.
நீதிக்கதை
இன்றைய செய்திகள்
தேசிய குடற்புழு நீக்க வாரம்- பள்ளி மாணவர்களுக்கு இன்று முதல் குடற்புழுநீக்க மாத்திரை வழங்கப்படுகிறது.
தமிழகம் முழுவதும் 91 காவல் ஆய்வாளர்கள் டி.எஸ்.பி.க்களாக பதவி உயர்வு.
மார்ச் 16 முதல் 12 முதல் 14 வயது குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்தப்படும் என மத்திய அமைச்சகம் தகவல்.
ஹிஜாப் விவகாரத்தில் நாளை தீர்ப்பு; பெங்களூர் முழுவதும் ஒரு வாரத்திற்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ரஷ்யா-உக்ரைன் இடையே நான்காம் கட்ட பேச்சுவார்த்தை தொடங்கியது.
இலங்கைக்கு எதிரான 2வது டெஸ்ட்டையும் வென்று தொடரை கைப்பற்றியது இந்தியா.
National Deworming Week- The first deworming pill is being given to school children today.
91 Police Inspectors promoted to DSPs across Tamil Nadu
March 16 to 12 to 14-year-olds will be vaccinated, according to the Union Ministry.
Judgment
tomorrow in the hijab case; there is 144 curfew to the whole of
Bangalore. Restraining orders have been issued for a week.
The fourth round of talk between Russia and Ukraine has begun.
India won the 2nd Test against Sri Lanka and won the series.
No comments:
Post a Comment