திருக்குறள் :
இயல்: நட்பியல்
அதிகாரம்:கூடா நட்பு
குறள் எண் :835
ஒருமைச் செயலாற்றும் பேதை எழுமையும்
தான்புக் கழுந்தும் அளறு
பொருள்:
தன்னிச்சையாகச் செயல்படும் பேதை, எக்காலத்திலும் துன்பமெனும் சகதியில் அழுந்திக் கிடக்க நேரிடும்
பழமொழி :
All’s well that ends well
நல்ல தொடக்கம் நல்ல முடிவைத்தரும்,
இரண்டொழுக்க பண்புகள் :
1. கடினமாக மட்டும் அல்ல கவனமாகவும் உழைப்பேன் அப்போது தான் வெற்றியை அடைய முடியும்.
2. மன நிறைவு வாழ்க்கையின் மந்திரக் கோல் எனவே எப்போதும் எல்லாவற்றிலும் மன நிறைவோடு இருப்பேன்
பொன்மொழி :
இலட்சியம் என்று ஒன்று இல்லாவிட்டால் முயற்சி என்ற சொல்லுக்கு அர்த்தம் இல்லாமல் போய்விடும்!”______பட்டுக்கோட்டையார்
பொது அறிவு :
1. விமானங்களின் டயர்களில் நிரப்பப்படும் வாயு எது?
நைட்ரஜன்.
2. கறையான் அரிக்காத மரம் எது?
தேக்கு மரம்.
English words & meanings :
ஆரோக்ய வாழ்வு :
முடக்கத்தான் கீரை வாத நோய்களுக்கு தீர்வாக இருக்கிறது. தோல் நோய்களான சொறி ,சிரங்கு, போன்றவற்றிற்கு பற்று வைத்து வந்தால் நல்ல நிவாரணம் கிடைக்கும். காது வலி, மூல வியாதிகள், மாதவிடாய் பிரச்சனைகள் போன்றவற்றை சரிசெய்யும்.மூட்டுவலிக்கு முடக்கத்தான் கீரையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், உடலில் வாதத் தன்மை கட்டுப்பட்டு மூட்டு வலியைப் போக்கும். தலைவலி, பொடுகு பிரச்சனைகளையும் சரிப்படுத்தும்.
கணினி யுகம் :
மார்ச் 16
அழ. வள்ளியப்பா 11 பாடல் தொகுதிகள், 12 புதினங்கள், 9 கட்டுரை நூல்கள், 1 நாடகம், 1 ஆய்வு நூல், 2 மொழிபெயர்ப்பு நூல்கள், 1 தொகுப்பு நூல் ஆகியவற்றை வெளியிட்டுள்ளார். இவற்றில், 2 நூல்கள் இந்திய நடுவண் அரசின் பரிசும், 6 நூல்கள் தமிழக அரசின் பரிசும்பெற்றன.
நீதிக்கதை
இன்றைய செய்திகள்
நீட் தேர்வு விலக்கு மசோதா குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கப்படும் என ஆளுநர் உறுதி--தமிழக அரசு தகவல்.
அலுவலக நேரத்தில் செல்போன் பயன்படுத்த நெறிமுறைகள் கட்டமைக்கப்பட வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவு.
ஹிஜாப் விவகாரத்தில் விதிக்கப்பட்ட தடை செல்லும் என உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு.
சீனாவில் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருவதால் 3 கோடி மக்கள் ஊரடங்கு கட்டுப்பாட்டின்கீழ் கொண்டு வரப்பட்டனர்.
ஆசிய ஜூனியர் கைப்பந்து -- இந்திய மகளிர் அணி சாம்பியன் பட்டம் வென்றது.
Governor assures that NEET exemption bill will be sent to the President - Government of Tamil Nadu Information.
The High Court ordered that the protocols for cell phone use during office hours should be structured.
The High Court has ruled that the ban imposed on the hijab case will go through.
3 crore people have been brought under curfew in China as the spread of corona continues to increase.
Asian Junior Volleyball - Indian women's team won the title.
No comments:
Post a Comment