திருக்குறள் :
திருக்குறள்:186
பிறன்பழி கூறுவான் தன்பழி யுள்ளுந்
திறன்தெரிந்து கூறப் படும்.
விளக்கம்:
அடுத்தவன் குறையை அவன் இல்லாத போது எவன் கூறுகிறானோ, அவனது குறை அவன் இல்லாதபோது இன்னொருவனால் கூறப்படும்.
பழமொழி :
Don't judge a book by its cover.
புறத்தோற்றம் கண்டு மயங்காதே.
இரண்டொழுக்க பண்புகள் :
1. கடினமாக மட்டும் அல்ல கவனமாகவும் உழைப்பேன் அப்போது தான் வெற்றியை அடைய முடியும்.
2. மன நிறைவு வாழ்க்கையின் மந்திரக் கோல் எனவே எப்போதும் எல்லாவற்றிலும் மன நிறைவோடு இருப்பேன்
பொன்மொழி :
சூழ்நிலைக்கு ஏற்றபடி மாறிப்போக ஒருமுறை நினைத்து விட்டால்! பிறகு ஒவ்வொரு சூழ்நிலைக்கும் நீ மாறிக்கொண்டே போக வேண்டி இருக்கும்”
பொது அறிவு :
1. இந்தியாவில் மக்கள் தொகை அதிகம் உள்ள நகரம் எது?
மும்பை.
2. 2023 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெறும் நாடு எது?
இந்தியா.
English words & meanings :
ஆரோக்ய வாழ்வு :
தர்பூசணியின் தோல் மற்றும் சதை சிட்ரூலைன் என்ற அமினோ அமிலத்தால் நிரம்பியுள்ளது. இது ரத்த அழுத்த அளவை ஒழுங்குபடுத்தி ரத்த ஓட்டத்தை சீராக தூண்டுகிறது. மேலும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். செரிமானத்தின் போது நம் உடலில் சேமிக்கப்படும் அதிகப்படியான கொழுப்பை எரிக்க உதவும் .இதனால் இதை தொடர்ந்து சாப்பிட்டு வர எடை குறையும். தர்பூசணியில் உள்ள லைக்கோபீன் எலும்பைப் பாதுகாக்கும்.
கணினி யுகம் :
நீதிக்கதை
இன்றைய செய்திகள்
மதுரை
மாவட்டம், வில்லூர் அருகே சித்தூரில் 700 ஆண்டுகள் பழமையான அய்யனார்
சிற்பம் மற்றும் நடுகல் ஆகியவை தொல்லியல் ஆய்வாளர்களால்
கண்டறியப்பட்டுள்ளது.
20-ம்
தேதி நடைபெறும் பள்ளி மேலாண்மைக் குழு கூட்டத்தில் அனைத்து தரப்பினரும்
பங்கேற்க வேண்டும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் வேண்டுகோள்
நீலகிரியில்
ஆண்டு முழுவதும் மலைக் காய்கறி பயிர்கள் தொடர்ந்து பயிரிடப்படுவதால்
மண்ணில் நூற்புழுக்களின் தாக்கம் மிக அதிகமாகக் காணப்படுகின்றன.
நூற்புழுக்களின் தாக்கத்தைக் குறைக்க பயிர் சுழற்சி முறையில் கோதுமை பயிர்
சாகுபடி செய்ய விவசாயிகளுக்கு அறிவுறுத்தி வருகிறோம். என தோட்டக்கலை
அதிகாரிகள் கூறியுள்ளனர்.
கடந்த
10 மாத உழைப்பின் வெளிப்பாடு நாளை தாக்கல் செய்யப்படவுள்ள நிதி நிலை
அறிக்கையில் தெரியவரும் என நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்
தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு
7 ஆயிரத்து 600 கோடி மதிப்பிலான பொருள்கள் வழங்கப்படும் என இந்திய அரசு
தகவல் . இருநாடுகளிடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
இங்கிலாந்து
ஓபன் பேட்மிண்டன் தொடரின் 2-ம் சுற்றின் பாட்டிக்கு ஸ்பெயின் வீராங்கனை
வீழ்த்தி இந்திய வீராங்கனை சாய்னாநேவால் முன்னேறியுள்ளார்.
In Chittoor near Villur at Madurai, the excavation team unearthed the 700 years old Iyyanaar statue and the victory stone.
All parents should participate in the SMC meeting on 20th March says Education Minister Anpil Mahesh.
In
Nilgiri, as the farmers are continuously growing vegetables, the soil
is infected with nematodes or threadworms. So Agri officers have been
advising farmers to do the crop rotation system.
Finance Minister Mr. Palanivel Rajan said that his 10 months work will be revealed during the release of the financial budget
7600
crore worth of goods will be provided to Sri Lanka by the Indian
Government. A treaty of understanding was signed between the two
countries.
Indian player Sainae advanced to the second round of the England open badminton series after beating the Spanish player.
No comments:
Post a Comment