SMC கவிதை
கூட்டம் கூடுது பாருங்க
பள்ளிக்கு வளர்ச்சிதானுங்க
பெற்றேரே அவசியம் வாருங்க
நம் பிள்ளைகள் கல்விக்காகதானுங்க
உறுப்பினராக சேர்ந்து பாருங்க
பள்ளி வலுப்பெறும் நிச்சயங்க
உதவ மனமுள்ள நீங்க
பாரிக்கு அடுத்த இடம்தாங்க
மாற்றமே நிலையானதுங்க
மாற்றுவோம் நாம் இணைந்துங்க
ஆசிரியர்கள் தயாரா இருக்காங்க
நீங்க மனமுவந்து சேருங்க
தரமான கல்விதானுங்க
நாம் சேர்ந்து அளிப்போமுங்க
மதிய உணவை அளிப்போமுங்க
சுவையா இருக்க உறுதி செய்வோமுங்க
குழந்தைகள் பாதுகாப்பு முக்கியமுங்க
கூடி நாம் செய்வோமுங்க
பள்ளியின் சூழலை மாற்றுவோமுங்க
பங்களிப்பு தர வேண்டுமுங்க
படிப்பைத் தாண்டிய பல இருக்குதுங்க
பாலகருக்கு திறமையை வெளிப்படுத்தனுமுங்க
கல்வி கற்க வேணுமுங்க
அதுக்குக்கான வசதி செய்வோமுங்க
அரசு பள்ளியில் சேர்ப்போமுங்க
அசுர வளர்ச்சிய கொடுபாபோமுங்க
மேலாண்மைக் குழுவில் சேருவோமுங்க
மேனாட்டு கல்வி தாண்டி தருவோமுங்க!
புனைந்தவர்:
கவிஞர்.
தணிகை நாகு,
9940859760.
No comments:
Post a Comment