கனமழையின் காரணமாக இன்று சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், விழுப்புரம், தருமபுரி, பெரம்பலூர், நீலகிரி, சேலம், கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு, கடலூர், அரியலூர் ஆகிய மாவட்டங்களுக்கு பள்ளிகளுக்கு மட்டும்
விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், விருதுநகரைச் சேர்ந்த மாணவர்
ஒருவர் அம்மாவட்ட ஆட்சியர் மேகநாத் ரெட்டியிடம், ‘இன்று பள்ளிக்கு விடுமுறை
வழங்கப்படுமா என்று ட்விட்டரில் கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு அவர்,
நாளை உன் பெற்றோருடன் வந்து என்னை சந்திக்கவும்’ என்று பதிவிட்டுள்ளார்.
முன்னதாக,
இரண்டு முறை மாணவர் பள்ளி விடுமுறை குறித்து ட்விட்டரில் மேகநாத்
ரெட்டியிடம் கேள்வி எழுப்பியிருந்தனர். அதற்கும் பொறுமையாக
பதிலளித்திருந்தார் மேகநாத் ரெட்டி.
No comments:
Post a Comment